அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

 
அர்ஜென்டினா ஹெலிகாப்டர் விபத்து

அர்ஜென்டினா நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் 'லா ரியோஹா' மாகாணத்தில் பரவி வந்த காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 'இஷிகுவாலாஸ்டோ' ங்கா அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

காட்டுத்தீ

இந்தக் கொடூர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த தீயணைப்பு வீரர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து அர்ஜென்டினா நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.