கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி... பெரும் பரபரப்பு!

 
கள்ளச்சாராயம்

 பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

கள்ளச்சாராயம்

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து உயிரிழப்புக்களும்  லாரிய காவல் நிலைய பகுதியில் பதிவாகியிருப்பதாகவும்,  இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாகவும் அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அதில் ஒருவர் டிராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி இதன் முதல் மரணம் ஜனவரி 15ம் தேதி நிகழ்ந்தது. ஆனால் இன்று ஜனவரி 20ம் தேதி தான் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

கள்ளச்சாராயம்

மீதமுள்ள 5 மரணங்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏழு உடல்களும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தகனம் செய்யப்பட்டு விட்டன. இச்சம்பவம் குறித்து விசாரணைக் குழு 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.  உயிரிழந்தவர்களின்   குடும்ப உறுப்பினர் ஒருவர்  "எனது சகோதரர் பிரதீப் தனது நண்பர் மனிஷுடன் கள்ளச்சாராயம் அருந்தினார். இருவரும் இறந்துவிட்டனர்" எனக் கூறியுள்ளார். பீகாரில் மது விற்பதற்கும் அருந்துவதற்கும்  2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web