சரக்கு லாரியில் கடத்தப்பட்ட 70 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.. தப்பியோடிய நபர்களுக்கு வலைவீச்சு !

 
சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், மாத்திரைகள், தங்கம் போன்றவை அடிக்கடி கடத்தப்படுகின்றன. மேலும் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வரை கடல் மார்க்கமாக சட்டவிரோத ஆட்கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடத்தலை தடுக்கும் முயற்சியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வாலிநோக்கம்-கீமாமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே லாரி டிரைவரும், அதில் இருந்த சிலரும் லாரியில் இருந்து இறங்கி ஓடினர்.

இதையடுத்து, சோதனை நடத்திய போலீஸார், 70 மூட்டைகளில் 30 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   பீடி இலைகள் மற்றும் சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை அலுவலர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்தவர்களை தேடி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web