கல்லூரி செமஸ்டர் தேர்வில் ஏஐ காப்பி... ஒரே இடத்தில் சிக்கிய 70 பேர்!
Nov 27, 2026, 10:50 IST
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் காப்பி அடிக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக மொபைல் போனுடன் ஒரே இடத்தில் 70 பேர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன ஏஐ செயலிகள் மற்றும் செல்போன்கள் மூலம் கேள்விகளுக்கு விடை தேடியதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.விதிகளை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
