7,000+ மக்கள் குவிந்தனர்... கோயிலில் இலவச 'சுயம்வரம்' நிகழ்ச்சியால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

 
சுயம்வரம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரந்தூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹரஹர மகாதேவர் கோயிலில் நடைபெற்ற இலவசத் திருமணப் பதிவுக்கான 'சுயம்வரம்' நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

இந்த இலவசத் திருமணப் பதிவு முகாமிற்கு சுமார் 1,500 பேர் வரை மட்டுமே வருவார்கள் என ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாகக் கண்ணூர், வயநாடு உட்படப் பல்வேறு கேரள மாவட்டங்களில் இருந்து 7,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கோயில் வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

5வது திருமணம்

மக்கள் கூட்டம் அலைமோதியதால் கோயில் பகுதியைத் தாண்டி, அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வரை வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு நெரிசல் உண்டானது.

கல்யாணம்

கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், வந்திருந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் விண்ணப்பப் படிவங்கள் உடனுக்குடன் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுச் சூழல் சமாளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.