தமிழகத்தில் ரூ.1,050 கோடி செலவில் 7,200 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

 
ஸ்டாலின் கூட்டம்

தமிழகத்தில் சுமார் ரூ.1050 கோடி செலவில், அரசு பள்ளிகளில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிகல்வித்துறைக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 17ம் தேதி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த தலைவர்கள் மற்றும் கட்சியினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் புதிதாக 7,200 புதிய வகுப்பறைகள் கட்டப்படுவதாக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த திட்டம் ரூ.1,050 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தனியார் பள்ளி

நடப்பு ஆண்டான 2022&2023ல் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையின்படி அரசு பள்ளிகளில் தற்போது 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றும் அவர் மகிழ்ச்சியாக தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தெம்பூட்டும் வகையில் அரசு பள்ளிகளில் 7,200 புதிய வகுப்பறைகள் கட்டப்படுவது குறித்த அறிவிப்பால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web