திருப்பதியில் பிரதமர் மோடிக்கு 75 அடி உயர கட்-அவுட்... கின்னஸ் சாதனைக்காக மணிநேர தொடர் நிகழ்ச்சி!

 
மோடி கட் -அவுட்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காகத் திருப்பதி தாரகராமா விளையாட்டு மைதானத்தில் 75 மணிநேர பிரமாண்ட தொடர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 அடி உயரத்தில் பிரமாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தாரகராமா விளையாட்டு மைதானத்தில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக 75 மணிநேரத் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

வெளிநாடு மோடி பயணம் வணக்கம்

இச்சாதனை நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்பான முறையில் 75 அடி உயரத்தில் பிரமாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கமாக 130 வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்தனர்.

தொடர்ந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை, மக்கள் சேவை மற்றும் பல்வேறு சாதனைகள் குறித்து விரிவாகப் பேசி வருகின்றனர்.