சிறுமியின் வயிற்றில் 750 கிராம் முடி உருண்டை! அரிய ‘ராபன்செல் சிண்ட்ரோம்’ பாதிப்பு

 
முடி

 

ஆந்திரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமியின் வயிற்றில் சேர்ந்திருந்த 750 கிராம் எடையுள்ள முடி உருண்டையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அரிதான ‘ராபன்செல் சிண்ட்ரோம்’ பாதிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Rapunzel Syndrome: బాలిక కడుపులో 750 గ్రాముల వెంట్రుకల ముద్ద.. వైద్యుల అరుదైన శస్త్రచికిత్స!

அனந்தபூர் அரசு மருத்துவமனையில் இந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராயதுர்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, தொடர்ந்து வயிற்றுவலி, வாந்தி மற்றும் உடல் எடை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் அதிக அளவில் முடி சேர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

750 Gram Hairball Removed From Stomach Of Andhra Girl With Rare Hair-Eating Disorder

சிறுவயதிலிருந்தே முடியைப் பிடுங்கி விழுங்கும் பழக்கம் சிறுமிக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. செரிமானமாகாத முடி வயிற்றில் படிப்படியாகச் சேர்ந்து கட்டியாக மாறியுள்ளது. இந்த முடி உருண்டை சுமார் 1.2 மீட்டர் நீளமும், 750 கிராம் எடையும் கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்அறுவை சிகிச்சை மூலம் முடி உருண்டை முழுமையாக அகற்றப்பட்டது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்