75வது சுதந்திர தினம்! சென்னை முழுவதும் 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு! அமைச்சர்கள் பங்கேற்பு!

 
சுதந்திர தினம் கோவில்

நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகளுக்கும், பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வழிபாடுகளிலும், பொது விருந்துகளிலும் கலந்து கொள்கின்றனர். 

தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சபாநாயகர் மு.அப்பாவு‌, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அதே போல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடபழனி முருகன் கோவிலில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தம்பு செட்டித் தெரு காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், ராயப்பேட்டை சித்தி புத்தி வினாயகர் கோவிலில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொள்கின்றனர்.

கோவில் நகைகள் ஆவணப்படுத்தப்படும்!  அமைச்சர் சேகர்பாபு !

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தங்க சாலை தெரு ஏகாம்பரேசுவரர் கோவிலில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கின்றனர்.
மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரபெருமாள் கோவிலில்  அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவிலில்  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.

கீழ்ப்பாக்கம் பாதாளபொன்னியம்மன் கோவில் - சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன். பூங்காநகர் கந்தசாமி என்ற முத்துக்குமாரசுவாமி கோவில் - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் கோவில் - சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.
சென்னை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீசுவரர் கோவில் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் - வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் - போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். சென்னை தேவராஜ முதலி தெரு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்.

அம்மன் கோவில்

கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை சக்திவிநாயகர் கோவில் - வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி.
மேற்கு தாம்பரம் செல்வவிநாயகர்,கோதண்டராமர் கோவில் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பாடி திருவல்லீஸ்வரர் கோவில் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அடையாறு அனந்தபத்மநாப கோவில் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
பள்ளியப்பன் தெரு அருணாச்சலேசுவரர் கோவில் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.
அயன்புரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் - தகவல்தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்.
திருவட்டீஸ்வரன்பேட்டை திருவட்டீஸ்வரர் கோவில் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web