திருப்பதியில் ஒரே நாளில் 76,000 பக்தர்கள் தரிசனம் - உண்டியல் காணிக்கை ரூ.3.33 கோடி வசூல்!
விழுப்புரம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது.
கோயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 76,422 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனம் செய்தவர்களில் 32,141 பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி நேர்த்திக்ககடனை நிறைவேற்றியுள்ளனர்.

பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளின் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் உண்டியல் வருமானமாக 3 கோடியே 33 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான திருப்பதி லட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சத்து 38 ஆயிரம் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 2 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் இலவச தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று கோயில் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
