79 ஆண்டுகள் சிறைத்தண்டனை!! மாணவிகளை பாலியல் ஆசிரியருக்கு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!!

 
court order

கேரள மாநிலம் கன்னூரில் அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் பி.இ.கோவிந்தன் நம்பூதிரி என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 50. பால் மணம் மாறாத மாறாத சிறுமிகளிடம், ஆசிரியர் என்ற புனிதமான போர்வையை பயன்படுத்தி தனது கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். 4 சிறுமிகள் இவரிடம் கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கோவிந்தன், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் பலாத்தாரம்

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் 4 மற்றும் 5ம் வகுப்பைச் சேர்ந்த 4 சிறுமிகள் ஒரு சிறுவன் என 5 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவரின் கொடூர முகம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கோவிந்தனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோழிக்கோட்டில் உள்ள தளபிரம்ப்பா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.


கோவிந்தன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபிக்கப்பட்டதால் ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 ஆண்டுகள் என வீதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ நீதிமன்றம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் தண்டனைகளும் வழங்கப்பட்டுதான் வருகிறது. இருப்பினும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் சாபக்கேடாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web