எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டரால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!! கோவையில் சோகம்!!

 
சிறுவன்

கோவை கே.ஜி.சாவடி அடுத்த உள்ள பிச்சனூர் பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருந்தான். ராமன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து மகன் கிருத்திக்குடன், பேபி தனது தாய் வீட்டில் தங்கி பிச்சனூர் அரசுப் பள்ளியில் மகனை 3-ம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

ஹீட்டர்

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பாட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதன் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இதனிடையே ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த பார்த்தபோது வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராமாத்தாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு கிருத்திக்கை அனுப்பி வைத்தனர். 

சிறுவன் பலி

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகாரின் பேரில், கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் ராமன் இறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் தாய் பேபி பரிதவிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web