16 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உட்பட 8 பேர் கைது - சத்தீஸ்கரில் கொடூரம்!

 
சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 16 வயது சிறுமியை அவரது பெற்ற தந்தையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அவருக்குப் பிறந்த குழந்தையை விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தாய் குடும்பத்தைப் பிரிந்து சென்ற நிலையில், தந்தையின் பராமரிப்பில் இருந்த 16 வயது சிறுமியை அவர் அச்சுறுத்தித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனிடையில் சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, தந்தையும் அவரது சகோதரியும் (சிறுமியின் அத்தை) சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து, சிறுமியைத் திருமணமானவர் எனக் காட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

பிறந்த ஆண் குழந்தையைச் சிறுமியின் தந்தையும் அத்தையும் சேர்ந்து சட்டவிரோதமாகப் பணத்திற்காக விற்பனை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் தந்தை, அத்தை மற்றும் குழந்தையை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.