அமெரிக்காவில் கொடூரம் - 8 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் ஒரு கோர முகத்தைக் காட்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற 2 பெண்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அமெரிக்கப் போலீசார், அங்கிருந்து தப்பியோட முயன்ற மர்ம நபரைத் துரத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, போலீசாருக்கும் அந்த நபருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், தாக்குதல் நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஏற்கனவே ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உள்நாட்டிலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "இனிமேல் நல்லவர் வேஷம் கிடையாது" என ஈரானை எச்சரித்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப், உள்நாட்டுத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
