இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை.. குடை எடுத்திட்டு போங்க!

 
வெயில் மழை

 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் , கூழ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. வெயில் ஒரு புறம் கொளுத்தி வரும் நிலையில் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்பச்சலனத்தால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை


இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மார்ச் இறுதி வரை வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வெயில் , மழை

கர்ப்பிணிகள், குழந்தைகள், இணைநோய்கள் இருப்பவர்கள், முதியவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web