8 கிராம் தங்கம், பட்டுப்புடவை... 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

 
அண்ணன் சீர் திட்டம்

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் தமிழக அரசின் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்வு செய்யվடும் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்காக அரசு தரப்பில் முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருமணம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக விரைவில் பிரத்யேக இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்தின் ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கான நிதியும் அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.