பெற்றோர்களே உஷார்!! சார்ஜரால் 8 மாதக் குழந்தை பலி!!

 
குழந்தை

பெரும்பாலான வீடுகளில் மொபைல் போன்களில் சார்ஜர் ஸ்விட்சுகள் ஆப் செய்யப்படாமல் இருக்கின்றன. இன்னும் சிலர் இரவு முழுவதும் மொபைலுக்கு சார்ஜ் போடுவர். டிவி  , ஏசி இவைகளும்  ரிமோட்டில் மட்டும் ஆப் செய்து விட்டு சுவிட்ச் ஆப் செய்வதில்லை.  காலை எழுந்து  பள்ளி செல்லும் குழந்தைகள் தவிர மீதமுள்ள அனைவரும் தனித்தனியே செல்போனை வைத்து கொண்டு மூழ்கிவிடுகின்றனர். அல்லது டிவி , சமூக வலைதளங்கள் லேப்டாப் எதனுடைய மின்சார கனெக்‌ஷன் சுவிட்சுகளும் ஆப் செய்யப்படுவதே இல்லை. அலட்சியம் பல நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்பதை உணர்வதே இல்லை.

குழந்தை

 சிறு அலட்சியம் கூட நம் வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  கர்நாடகாவில்  உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்லுட்கர். இவர் ஹெஸ்காம் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து  வருகிறார். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள்.  சஞ்சனா  3வதாக கர்ப்பமாக இருந்தார்.   8 மாதத்தில் ஒரு பெண்குழந்தை  சானித்யா   வீட்டில் பெட்டில் படுத்து கிடந்தது. அப்போது குழந்தையின் அருகே செல்போன் சார்ஜர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. சார்ஜரின் ஒரு முனை பிளக்பாயிண்டில் சொருகி   சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்தது.    அந்த குழந்தை செல்போன் சார்ஜரை தனது வாயில் வைத்தது. செல்போன் சார்ஜர் வழியாக குழந்தையின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த குடும்பத்தினர் கதறி துடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

குழந்தை உயிரிழப்பு

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்   ஏற்கனவே  குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.  மற்றொரு குழந்தையின் பிறந்த தினமான இன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தயாராக வேண்டிய வீடு சோகமயமானது.  வேலைக்கு சென்றிருந்த சந்தோஷுக்கு இது குறித்து   தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்த அவர் குழந்தையின் உடலை பார்த்து  மயங்கி விழுந்தார். இதையடுத்து சந்தோசும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து கார்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சார்ஜரை வாயில் வைத்து குழந்தை  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web