வியட்நாம் படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; உயிர் தப்பிய பயணியின் உலுக்கும் வாக்குமூலம்!

 
வியட்நாம்

வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவுப் பகுதியில் நிகழ்ந்த கோர விசைப்படகு விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 தொழிலதிபர்கள் உட்பட மொத்தம் 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ள துயரச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கோரப் பேரிடரிலிருந்து முறையில் உயிர் தப்பிய இந்தியப் பயணி நிர்மல்குமார் என்பவர் விபத்து நிகழ்ந்த விபரங்கள் குறித்து முதன்முறையாக நெஞ்சை உலுக்கும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

வியட்நாம்

"நாங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தீவிலிருந்து மற்றொரு தீவை நோக்கி விசைப்படகில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாகக் கடல் சீற்றத்தில் சிக்கிப் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பலர் தண்ணீருக்குள் மூழ்கினர்" என்று நிர்மல்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கித் தமிழகத்தின் திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

gட்ஃப்க்

இவர்களுடன் சேர்த்து அண்டை மாநிலங்களான கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்களின் உடல்கள் தற்பொழுது வரை மீட்கப்பட்டுள்ளதாக  அதிர்ச்சித் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் வியட்நாம் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.