டிசிஎஸ் அலுவலகத்தில் பாலியல் தொல்லை புகார் கூறிய 8 பெண் ஊழியர்கள்... உடந்தையாக இருந்த பெண் ஹெச்.ஆர் உட்பட 7 பேர் கைது!

 
tcs டிசிஎஸ் tcs டிசிஎஸ்

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தின் நாசிக் அலுவலகத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் மற்றும் புகார்கள் கார்ப்பரேட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நிறுவனம் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நாசிக் கிளையில் பணியாற்றும் 8 பெண் ஊழியர்கள், தங்களது உயரதிகாரிகள் மீது அடுக்கடுக்கான மற்றும் அதிர்ச்சிகரமான புகார்களை முன்வைத்துள்ளனர்.  மூத்த ஊழியர்கள் தங்களுக்குப் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் நெருக்கடி கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளனர். இவை அனைத்தையும் விட அதிர்ச்சியாக, அலுவலக வளாகத்திற்குள்ளேயே கட்டாய மதமாற்ற முயற்சிகள் நடந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இந்தப் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறை உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கியது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒரு பெண் மனிதவள மேலாளர் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை டிசிஎஸ் நிர்வாகம் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களை நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனத் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்-ஸில், பெண் ஊழியர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "பணிபுரியும் இடத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" எனப் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.