அமெரிக்காவில் பரிதவிக்கும் 80,000 இந்திய ஐடி ஊழியர்கள்.. அதிர்ச்சி தகவல் !

 
it

தொழில்நுட்ப துறையில் கணிசமான அளவில் வேலையிழப்பு நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவில் தங்கியுள்ள இந்தியர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு 60 நாட்களுக்குள் அடுத்த வேலை கிடைக்கவில்லையெனில் அமெரிக்காவில் தங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் ஐ.டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

h1p visa

இந்த நிலையில் அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 30 முதல் 40 சதவீதம் இருக்கலாம் என்றும் அந்த வகையில் பார்த்தால் அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டும் சுமார் 80,000 வேலை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் கணிசமானோர் H-1B மற்றும் L1 விசாவில் உள்ளனர். H-1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா ஆகும். இந்த விசாவை வைத்திருப்போர் அமெரிக்காவின் நிரந்தர குடிமகன் அல்ல. அங்கு வேலை செய்யும் வரை அமெரிக்க குடிமகனாக கருதப்படுவர். வேலை இல்லை எனில், அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 85 ஆயிரம் H-1B விசாவை வழங்குகிறது. தற்போது வரை சுமார் 9 லட்சம் பேர் இந்த விசாவை கொண்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இதில்தான் 2 லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

h1p visa

பொதுவாக இப்படியான வேலையிழப்பு ஏதாவது ஒரு நிறுவனத்தில்தான் நடக்கும். எனவே மற்ற நிறுவனத்தை ஊழியர்கள் தேடி சென்றுவிடுவார்கள். ஆனால் இம்முறை பல்வேறு நிறுவனங்களில் இதுபோன்று வேலையிழப்பு ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஊழியர்கள் புதிய வேலைகளை தேடுவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

இவ்வாறு H-1B விசாவில் கடந்த ஓராண்டு முன்னர் வந்த இளம்பெண் ஒருவர் தனது மகனை பள்ளியில் சேர்த்துள்ளார். தற்போது இவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்கவில்லையெனில் அவர் தனது மகனுடன் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இப்படியான நெருக்கடி காரணமாக பலரும் இந்த விசா கால அவகாசத்தை கூடுதலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

h1p visa

உலகளாவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை ஆகியவை வேலை இழந்த ஐடி நிபுணர்களுக்கு உதவ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பணிநீக்கம் செய்யப்பட்ட இந்திய ஐடி ஊழியர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். ஒரு வாட்ஸ்அப் குழுவில், 800 க்கும் மேற்பட்ட வேலையற்ற இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் நாட்டில் தோன்றும் காலியிடங்கள் குறித்த தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். எனினும் இது எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.

h1p visa

ஒரே நேரத்தில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளதால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வேலை செய்த ஊழியர்களின் நிலை மிகவும் திண்டாட்டமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 

From around the web