போப் ஆண்டவர் லியோவின் திறந்தவெளி திருப்பலி - 8,00,000 பக்தர்கள் பங்கேற்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் லியோ நடத்திய பிரம்மாண்டமான திறந்தவெளி திருப்பலி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். வாடிகன் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்நிகழ்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸின் புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாஸ் டி லா கான்கார்ட் பகுதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். சிறப்பு வாகனத்தில் வருகை தந்த போப் லியோவை அங்குள்ள பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் கோஷங்களுடனும் வரவேற்றனர்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் அரங்கேறிய பிளாஸ் டி லா கான்கார்ட் பகுதியில் இந்தத் திருப்பலி நடத்தப்பட்டது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விழா மிகச் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது.
