80-களின் ஸ்டைலில் அசத்தும் ஏஐ புகைப்படங்கள் - இன்ஸ்டாவைத் தெறிக்க விடும் பயனர்கள்!

 
80ஸ் 80களின் இன்ஸ்டா

சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தற்போது 1980-களின் விண்டேஜ் தோற்றத்தில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. இது ஒரு புதிய டிரெண்டாக உருவெடுத்துள்ளது. சாட் ஜிபிடி மற்றும் பிற மேம்பட்ட ஏஐ தளங்களைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களின் தற்போதைய புகைப்படங்களை 80-களின் பாணிக்கு மாற்றுகின்றனர்.

இந்தப் புகைப்படங்கள் அந்தக் காலத்துக்கே உரிய ஆடை அலங்காரம், தலைமுடி அமைப்பு மற்றும் பழைய ரெட்ரோ கேமராக்களின் தன்மை கொண்ட ஃபில்டர்களுடன் மிகவும் தத்ரூபமாக உள்ளன.

நவீன தொழில்நுட்பம் மூலம் பழைய காலத்தை நினைவூட்டும் இந்தப் படங்கள், இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.