விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை!! அதிர்ச்சி தகவல்!!

 
மருந்துகள்

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

மருந்துகள்

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில், 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. அவற்றில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

மருந்து மாத்திரைகள்

அதன் விவரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web