அரசு துறைகளில் 839 காலிப் பணியிடங்கள்.. ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 839 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 56 வகையான தொழில்நுட்பப் பதவிகளுக்கு இந்த ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பிற முக்கியத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சாலை ஆய்வாளர்: 149 பணியிடங்கள் (ஊரக வளர்ச்சித் துறை). பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்: 129 பணியிடங்கள் (ஊரக வளர்ச்சித் துறை) இளநிலை வரைதொழில் அலுவலர் : 101 பணியிடங்கள் (நீர்வளத் துறை - PWD) இளநிலை பயிற்சி அலுவலர்: 117 பணியிடங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை) உதவி வேளாண்மை அலுவலர் : 110 பணியிடங்கள் (வேளாண்மைத் துறை)

டிஎன்பிஎஸ்சி

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூலை 17, 2026

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2026 (இரவு 11:59 மணி வரை)

விண்ணப்பத் திருத்தக் காலம்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை

இம்முறை டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்குப் பயனுள்ள வகையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் நெட் பேங்கிங் தவிர்த்து (GPay, PhonePe போன்றவை) மூலமாகவும் எளிதாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

இத்தேர்வுகள் நேர்காணல் இல்லாத பதவிகள் என்பதால், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விரிவான கல்வித் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையைத் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் சரிபார்த்து, ஜூலை 17 முதல் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.