ரூ.914 கோடியில் 842 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய அறிவிப்பு!

 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைச்சர் பா.ராஜ்குமார்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வீட்டுவசதி அமைச்சர் ப.ராஜ்குமார்

மக்களின் தேவைக்கேற்ப சுயநிதித் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.914 கோடி செலவில் 842 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாகக் கட்டப்படவுள்ளன.

சென்னை (அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம், எர்ணாவூர்), கடலூர் (குண்டுசாலை), மதுரை (எல்லீஸ் நகர்), திருவள்ளூர் (திருமழிசை) மற்றும் கன்னியாகுமரி (வல்லன்குமாரவிளை) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக்கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.