8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பின்றி முடங்கியுள்ளனர் - மாணிக்கம் தாகூர் வேதனை!

 
மாணிக்கம் தாகூர்

நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி எதிலும் ஈடுபட முடியாத சூழலில் உள்ளதாகக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கவலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் எந்தவிதக் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது தொழிற்பயிற்சியிலும் ஈடுபடாமல் வேலையின்றித் தவித்து வருவதாகக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணிக்கம் தாகூர்

நிதி ஆயோக் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய சூழலில் படித்து முடித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேர் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்குப் பொருத்தமான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் இளைஞர்களுக்குப் பொருத்தமான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.