மதுராந்தகத்தில் 893 முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தகுதிபெற்ற வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காகப் படிவம் 12டி-யின் கீழ் தபால் வாக்குப்பதிவு கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

தபால் வாக்குகளைச் சேகரிப்பதற்காகத் தேர்தல் ஆணையம் சார்பில் மொத்தம் 8 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பதிவின் மூலம் மதுராந்தகம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 893 பேர் தங்களது தபால் வாக்குகளை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர்.
தகுதிபெற்ற வாக்காளர்களிடம் பெறப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
