அம்..மாடியோவ்...!! 8 கோடிக்கு 800 டன் வேப்பங்கொட்டை வர்த்தகம்!!

 
வேப்பங்கொட்டை

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் விவசாயம் ஒரு போகம் மட்டுமே நடக்கிறது. நெற்பயிர் விவசாயம் செய்யப்படும் காலங்கள் தவிர்த்து, மற்ற காலங்களில் பல்வேறு விவசாயம் சார்ந்த பணிகளில் மக்கள் ஈடுபடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக வேப்பங்கொட்டை மூலம் கிடைக்கின்ற வருமானம் விவசாயிகளுக்கு அதிக அளவில் கைகொடுப்பதால், கிராமங்களில் வேப்ப மரங்களில் இருந்து விழுகின்ற, வேப்பம் பழங்களை சேகரித்து விற்பனை செய்வதில் கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வேப்பங்கொட்டை


கடந்தாண்டை போல இந்தாண்டும் வேப்பங்கொட்டைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வேப்பங்கொட்டை சேகரிப்பு பணியில் கிராம மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் வரை கிலோவுக்கு ரூ.130க்கு வரை விற்பனையாகி வந்த வேப்பங்கொட்டை தற்போது வரத்து அதிரிப்பின் காரணமாக ரூ.10 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேப்பங்கொட்டை

நாள் ஒன்றிற்கு 3 கிலோ வரை கிடைப்பதால் குடும்பச் செலவிற்கு தேவையான பணம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “கடந்த மாதம் வரை வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை வேப்பங்கொட்டைவாங்கப்பட்டது. இந்த மாதம் வரத்து சற்று குறைந்துள்ளதால் ரூ.120 வரை வாங்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 300 டன், சிவகங்கையில் 350 டன், விருதுநகரில் 150 டன் என மொத்தம் 800 டன் வேப்பங்கொட்டைகள் மொத்த வியாபாரிகள் மூலம் உரம் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது” என்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web