ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்குப்பதிவு - மேலும் ஒரு சிறுமி புகார்.. 12 சிறுமிகள் வரை நாசம் செய்த கொடூரம்!

 
ஜெம் ​​​​​​​வீரமணி SRMU கண்ணையா மகன் பிரகாஷ்

சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி மீது, மேலும் ஒரு சிறுமியின் புகாரின் அடிப்படையில் 8-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையினரால் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணி மீது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்குகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரமணி சாந்தி

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபா்கள் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் இவர்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி  மகள் அர்ச்சனா

இவ்வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.