8 வயது சிறுவன் கடத்தல்.. போலீசாரின் துரித நடவடிக்கையால் உடனே மீட்பு..!!

 
ஓமலூர் 8 வயது சிறுவன் கடத்தல்

8 வயது சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் துரிதமாக கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வெங்கடாசலம் என்பவர், குழந்தையை தத்தெடுத்துக் கொடுப்பதாக கூறியதை நம்பி,தெலங்கானாவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி வெங்கடாசலம் குழந்தையை தடுத்தெடுத்துக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

police station

இதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேஷ் தனது கூட்டாளிகளுடன் கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்து, வெங்கடாசலத்திடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர மறுத்த நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த அவரது 8 வயது மகனை அந்த கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது.

police investigation

இது தொடர்பான புகாரின்பேரில், துரித நடவடிக்கை மேற்கொண்ட ஓமலூர் காவல்துறையினர் பெங்களூரு சென்று கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தது. இதையடுத்து 8 வயது சிறுவனை மீட்ட காவல் துறையினர் வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web