நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி!
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் கள்ளச்சாராயம் விற்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நாகாலாந்தின் துவன்சங் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
