வயநாடு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் பலி!

 
கேரள நிலச்சரிவு

  கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு பீதியில் உறைந்துள்ளது. நாடு முழுவதையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த 89 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவு
இந்நிலையில், தமிழர்கள் வயநாட்டில் தேயிலை தோட்டம், வாகனம் ஓட்டுதல் மற்றும் பல வேலைகளுக்காக அங்கு தங்கிருந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழர்கள் புலம்பெயர்ந்து முண்டக்கையில் வசித்து வந்தனர். இதில்  9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 
தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளாக அவர்கள் அங்கு வசித்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் இடம்பெற்று இருப்பது தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என  அஞ்சப்படுகிறது. தொடர்ந்து 2வது நாளாக  ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த கல்யாண்குமார் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார்.  

From around the web