சொகுசுக்கார் மோதிய விபத்தில் காவலர் உட்பட 9 பேர் பலி!!முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

 
கார் விபத்து

குஜராத்தில்  அகமதாபாத்-எஸ்ஜி நெடுஞ்சாலையில் இன்று ஜூலை 20 ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு   இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தில் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.   அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, மக்கள் கூட்டம் மீது வேகமாக மோதியது.


இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆழ்ந்த இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

விபத்து

 மேலும்  “இஸ்கான் பாலத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.  உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என முதல்வர்   பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web