பெரும் சோகம்... கடித்து குதறிய நாய்கள... 9 வயது சிறுவன் திடீர் உயிரிழப்பு!

 
நந்தீஸ்


 தமிழகத்தில் சமீபகாலமாக தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே நாய் கடித்து குதறிய நிலையில் 9 வயது சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தில் வசித்து வருபவர்  மாதேஷ்.

நாய்


சென்ட்ரிங் தொழிலாளயான இவரது   மகன் 9 வயது நந்தீஸ்.  இவன், அங்குள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். மாதேஷின் மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். சிறுவன் நந்தீஸ் தன்னுடைய பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான்.  5 நாட்களுக்கு முன்பு நந்தீஸ் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய்கள் துரத்தி துரத்தி அவரை கடித்துவிட்டன.  நாய் கடித்த விபரத்தை சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லவே இல்லை.  நேற்று முன்தினம் நந்தீசுக்கு திடீரென மூச்சிரைப்பு தொடங்கியது. உடனடியாக அவரது பாட்டியும்,  அத்தையும்  அவனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆம்புலன்ஸ்


தொடர்ந்து நந்தீசுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.  து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூளகிரி அருகே சிறுவன் உயிரிழந்து விட்டதாக  மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு நந்தீஸ் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்னர், சிறுவனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!