90 வயதிலும் குறையாத உடற்பயிற்சி ஆர்வம்! ஸ்பெயின் மேடையில் அசத்திய ஜப்பான் பாடிபில்டர்!

 
90

 

வயது 90 ஆனாலும் உடற்கட்டுப் பயிற்சியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனசாவா, ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார்.

ஸ்பெயினின் சான்டா சுசன்னா நகரில் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற சர்வதேச உடற்பயிற்சி மற்றும் பாடிபில்டிங் கூட்டமைப்பு (IFBB) போட்டியில் அவர் கலந்து கொண்டார். 50 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற மாஸ்டர்ஸ் பிரிவில், தன்னைவிட பல ஆண்டுகள் இளைய போட்டியாளர்களுடன் மேடையேறினார்.

போட்டிக்கு முன்பு மற்ற வீரர்களைப் போலவே உடலைத் தயார்படுத்தி, பயிற்சி மேற்கொண்டு மேடையில் தசைகளை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் அவருக்கு பதக்கம் வெல்லும் இடம் கிடைக்கவில்லை என்றாலும், தனது முயற்சியைத் தொடரும் உறுதியுடன் உள்ளார்.

தனக்கு 50 வயதானதிலிருந்து பழுப்பு அரிசி, நாட்டோ எனப்படும் புளிக்கவைக்கப்பட்ட சோயா உணவு, மிசோ சூப் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய ஜப்பானிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Who Is Toshisuke Kanazawa? The Japanese Bodybuilder Flexing His Physique At 90

தனது 93-வது வயதில் மீண்டும் ஒருமுறை போட்டியில் பங்கேற்க விரும்புவதாகவும், அதன்பிறகு ஓய்வு பெறலாம் என்றும் கனசாவா கூறியுள்ளார். வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற தனது அனுபவம் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.