அன்புமணி, ராமதாஸ் வழக்கை விசாரிக்கும் நீதிபதி உட்பட 98 பேர் பணியிடமாற்றம்!

 
அன்புமணி ராமதாஸ் பாமக அன்புமணி ராமதாஸ் பாமக

தமிழக நீதித்துறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பா.ம.க.வின் முக்கிய வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தர்மபிரபுவும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து வந்த மூத்த சிவில் நீதிபதி எம்.தர்மபிரபு, தற்போது சிறு வழக்குகள் 3-வது நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

 ராமதாஸ், அன்புமணி

சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கே.ஜோதி , தமிழ்நாடு மாநில ஜுடீசியல் அகாடமியின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் துணைச் செயலாளராக இருந்த எஸ்.சந்தானகுமார் , சென்னை உயர் நீதிமன்ற சொத்து பராமரிப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பாணையின்படி, சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 98 மூத்த சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸே தனது மகன் அன்புமணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருப்பது ஏற்கனவே தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டிருப்பது, வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.