9ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! பள்ளிகளில் தொடரும் சோகம்!!!

 
ரயில்

பள்ளி முதல்வர் அடித்ததால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இளம் சமுதாயத்தினர் எந்த பிரச்சினையையும் சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே தீர்வு என்று நினைத்து தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் போதிலும் பல அசம்பாவிதங்கள் நடந்து முடிந்துவிடுகிறது வேதனை அளிக்கிறது.

தற்கொலை

அரியானா மாநிலம் ஆதம்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த மாணவன் கடந்த 10ம்தேதி ஹிசார் மாவட்டத்தில் ஒரு பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டான். இந்த தற்கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை
இது குறித்து ஒரு வாரம் கழித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், ‘‘எங்கள் மகனை கடந்த சில நாட்களாகவே பள்ளி முதல்வர், நீ படிப்பதற்கு லாயக்கில்லை என்று திட்டியுள்ளார். மேலும் அனைவர் முன்னிலையிலும் அடித்து அவமானப்படுத்தி உள்ளார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத எங்கள் மகன், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இதனை சக மாணவர்கள் மூலம் அறிந்தோம். எனவே எனது மகனை தாக்கி தற்கொலைக்கு தூண்டிய பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 9ம் வகுப்பு மாணவன் பள்ளி முதல்வர் திட்டி, அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web