42 கிமீ ஓடி 9 வயது சிறுமி அசத்தல் சாதனை!!

 
அக்‌ஷயா


சென்னை மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 42 கி.மீட்டர் ஓடிய 9 வயது சிறுமி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.நேற்று சென்னை பெசன்ட் நகரில்  கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். இதில் 5ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி அக்சிதாவும் கலந்து கொண்டார். இவர் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

மாரத்தான்

சிறுமி அக்சிதா 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்-, வீராங்கனைகள் ஆச்சரியமடைந்தனர். விடாமுயற்சியுடன் சிறுமி அக்சிதா 42 கிலோ மீட்டர் தூரத்தையும் முழுமையாக ஓடி முடித்தார். இதை கண்டு வியந்து போன சக வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் என அனைவரும் சிறுமி அக்சிதாவை வெகுவாக பாராட்டி வாழ்த்தினர். இது குறித்து சிறுமி கூறும்போது, ‘‘தான் எதிர்காலத்தில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போன்று வேகமாக ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றிகளை குவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை பூர்வீகமாக கொண்ட தினகரன்& தேவகனி தம்பதியின் மகள் சிறுமி அக்சிதா. சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருகிறார். 9 வயது சிறுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.சமீப காலமாக விளையாட்டுத் துறையில் தமிழக வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்கள். அதற்கு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளித்து வரும் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்களே காரணம். இதுபோன்ற பல சாதனைகளை வீரர், வீராங்கனைகள் படைக்க வேண்டும் என்பதே அனைவரும் ஆர்வமாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web