கொட்டும் மழையில் தியானம் செய்த 10 வயது சிறுவன்!! சுற்றுலாப் பயணிகள் பரவசம்!!

 
மழையில் யோகா

கன்னியாகுமரி கடற்கரையில் சிறுவன் ஒருவன் மதில் சுவர் மீது ஏறி நின்று நடனம் ஆடியபடி தியானம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.ழையில் நனைய எந்த குழந்தைக்குத்தான் பிடிக்காது? அதிலும் அவர்கள் அடிக்கும் லூட்டியை பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

கடந்த 3 நாட்களாகவே கன்னியாகுமரியில் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை பார்க்க முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களிலேயே முடங்கி பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி
இந்நிலையில் கொட்டுகிற மழையில் மகிழ்ச்சி ததும்ப ததும்ப சிறுவன் ஒருவன் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்க கடற்கரையில் உள்ள மதில் சுவரில் ஏறி நின்று யோகாசனம் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டு அசத்தினான். பின்னர் ஒற்றைக் காலில் நின்றபடியும் நடனம் ஆடினார். இந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தி ஆரவாரத்தை பெற்றது. 

கன்னியாகுமரி

இதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இருப்பினும் அந்த சிறுவன் எதையும் பொருட்படுத்தாமல் தனது சாகசத்தை செய்து கொண்டே இருந்தான். சிறுவனின் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web