ரூ46 கோடி நிதி திரட்டிய 16 வயது சிறுமி மரபணு கோளாறால் உயிரிழப்பு!!

 
அப்ரா

அப்ரா என்ற 16 வயது சிறுமி ஸ்பைனல் தசைச் சிதைவு என்ற நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதே வகையான நோய் தனது சகோதரனுக்கு ஏற்பட்டதால் அவரின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிகிச்சைக்கு ரூ.18 கோடி தேவைப்படும் என்ற நிலையில் 2 வங்கிக் கணக்குகள் தொடரப்பட்டு மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைப் பார்த்த 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நன்கொடை அளித்து உதவியுள்ளனர். சோல்ஜென்ஸ்மா என்ற மருந்தை வாங்க 18 கோடி தேவைப்பட்ட நிலையில் அதற்கும் கூடுதலாக ரூ.46 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரா

இந்நிலையில் கடந்த சில நாட்களாக   கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த  சிறுமி அப்ரா நேற்று உயிரிழந்தார். அவரது சகோதரர் முகமதுவுக்கு எஸ்எம்ஏ என்ற அரிய நோயான தசைகள் வலுவிழந்து இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி மருந்து கொடுக்கப்பட்டு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


விசித்திர நோயால் பலியான சிறுமி அப்ரா பெரிய லட்சியங்களை கொண்டிருந்தார். இசையின் மீது அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. மிகவும் திறமையான பெண்ணான அவர் யூடியூப் சேனலில் தனது வாழ்க்கை, பயணங்கள் மற்றும் படிப்புகள் மற்றும் அவரது சகோதரரின் சிகிச்சை பற்றிய புதுப்பிப்புகளைப் பற்றிய வீடியோ புதுப்பிப்புகளை வோல்கிங் மற்றும் பகிர்வதில் தனது முயற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் பலி

ரூ.18 கோடிக்கு மேலாக ரூ.46 கோடி கிடைத்ததால், அந்த அதிகப்படியான நிதியில், எஸ்எம்ஏ பாதித்த மற்ற இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கமிட்டி பணம் வழங்கியதுடன், மீதமுள்ள ரூ.12 கோடியை எஸ்எம்ஏ பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசிடம் ஒப்படைத்த சிறுமி தனது 16 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web