வீடியோ!! 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!!

 
ஆழ்துளை

மத்திய பிரதேச மாநிலத்தில்  8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மாண்டவி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் அங்குள்ள திறந்தவெளியில்   விளையாடி கொண்டிருந்தான். இதனிடையே  சிறுவன், அந்தப் பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.


நீண்ட நேரம் ஆகியும் மகனை காணாததால் சந்தேகம் அடைந்த தாய் வெளியில் வந்து பார்த்தபோது தமது மகன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிறுவனின் மற்றும் அக்கம் பக்கத்தினர்   தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர்,   400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை அறிந்தனர்.

ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

உடனே அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். சில நிமிடங்களில் து மாண்டவி கிராமத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர், சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர் ஆழ்துளை கிணற்றில் சி்க்கியுள்ள சிறுவன் 55 அடி ஆழத்தில் உள்ளதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும்,  பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  சிறுவனை உயிருடன் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுமூச்சில் மேற்கொள்வோம் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

From around the web