நடிப்பிலிருந்து ஓய்வு!! மனம் திறக்கும் அமீர்கான்!!

 
அமீர்கான்

பாலிவுட் நடிகர்களில் முன்னணி நட்சத்திர  நடிகர்களில் ஒருவர்  அமீர்கான். இவர் கடந்த 35 வருடங்களாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி  பெரும் சர்ச்சையில் சிக்கி கொண்ட  படம் லால் சிங் சத்தா. இந்த படத்தை நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

அமீர்கான்

இந்நிலையில் இப்படம்  வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில்  இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து அமீர்கான் விடுத்த செய்திக்குறிப்பில் "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்.

அமீர்கான்

அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது . அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்கலாம் என  முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கலாம் என முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web