பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி!! தாய் கண்முன்னே நடந்த பரிதாபம்!!

 
விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தில் வசித்து வருபவர் காசி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு வேதவர்ஷினி மற்றும் பவானிஸ்ரீ (1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் வேதவர்ஷினி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகின்றார். 

சேலம்

இந்த நிலையில், வழக்கம் போல் மகள் வேதவர்ஷினியை பள்ளி வாகனத்தில் தாய் சுதா ஏற்றி விட்டுள்ளார். அப்போது குழந்தை பவானிஸ்ரீயும் பின்னால் வந்துள்ளார். இதனை தாய் சுதா கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது குழந்தை பவானிஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் குழந்தை பவானிஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

குழந்தை

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சுதா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து பள்ளி வாகனத்தை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைவாசல் போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?