ஓடையில் அடித்து செல்லப்பட்டு கல்லூரி மாணவி பலி!! கதறி துடித்த பெற்றோர்!!

 
ஜீவிதா

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே சிங்களம் கோம்பையில்  வசித்து வரும் தம்பதி  சுரேஷ், கவிதா. இவர்களுடைய இளைய மகள் 18 வயது ஜீவிதா . இவர்  தனியார்
கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ஜீவிதா கல்லூரி முடித்து விட்டு சிங்களம் கோம்பை அருகே உள்ள பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கி அங்கிருந்து  தாய் கவிதாவுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

ஜீவிதா

அப்போது அவர்கள் எருமப்பட்டி அருகே கொக்கு பாறை ஓடை பகுதியில் சென்றபோது ஓடையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் மொபட்டை நிறுத்தி தண்ணீரில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற நிலையில் கவிதா அருகில் இருந்த செடியை பிடித்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் செடியை பிடித்திருந்த கவிதாவை மீட்டனர். ஜீவிதாவை ஓடை தண்ணீர் இழுத்து சென்றது. இதுகுறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஓடையில் இழுத்து செல்லப்பட்ட ஜீவிதாவை தேடி வருகின்றனர்.

ஜீவிதா

இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், எருமப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், ஓடையில் இழுத்து செல்லப்பட்ட ஜீவிதாவை தீவிரமாக தேடி வந்தனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. மேலும் சம்பவ இடத்திற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று பார்வையிட்டார்.

12 மணி நேரமாக தேடியும் கல்லூரி மாணவி கிடைக்காததால் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று காலை கொக்கு பாறை ஓடை பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களும் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web