அரசு வேலைக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற தம்பதி !!

 
ad

அரசு வேலை போய்விடும் என்று பயத்தில் தனக்கு பிறந்த 3ஆவது குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்ஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக ஜவர்லால் மேக்வால் (36) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி மூன்றாவதாக கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3ஆவதாக பெண் குழந்தையும் பிறந்தது. 

pergnant

ஆனால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது. மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது. இந்தநிலையில், வேலையில் எந்த விதி பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரும் அவனது மனைவியும் மூன்றாவது குழந்தையை மறைக்க திட்டமிட்டனர். ஆனால், ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளனர்.  இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

pergnant

பச்சிளம் கால்வாயில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தம்பதி இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web