சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை!

 
டாஸ்மாக்

சென்னை முழுவதும் ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் வருகிற 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதற்கான அணிவகுப்பு ஒத்திகைகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

டாஸ்மாக்

இந்நிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வருகிற 15ம் தேதி சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் இயங்காது என்று அறிவித்துள்ளார். மேலும் தனியார் கிளப்புகள், கிளப்புகளை சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என உரிமம் பெற்ற அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும் என்று அறிவித்தார். இதை மீறி அன்று மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகள் வருகிற 15ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையே மது பிரியர்கள் மதுவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மறுநாள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய மது இருப்பில் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web