சரக்கு பாட்டிலுக்குள் செத்து மிதந்த தவளை! குடிமகன்கள் அதிர்ச்சி!

 
மது பாட்டில் தவளை

சரக்கு பாட்டிலுக்குள் தவளை செத்த மிதந்த படியே இருந்தது தீபாவளிக்கு ஆர்வமுடன் குடிக்க திரண்ட குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்தது. சரக்கு இல்லாமல் பண்டிகையா? வாழ்வோ.. சாவோ... அடிடா மேளத்த திறங்கடா பாட்டில.. என்கிற ரைமிங்கான வார்த்தைகள் வெவ்வேறு மொழிகளில் உச்சரிக்க பட்டாலும், இந்தியா  முழுக்கவே ஒவ்வொரு தருணத்திலும் பொது மந்திரம் போல உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாவட்டத்தில், ஆசையாசையாய் சரக்கடிக்க குவிந்த குடிமகன்கள், ஒருவர் வாங்கி இருந்த மதுபாட்டிலுக்குள் தவளை இறந்த படியே மோட்சத்தை நோக்கி மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து சக ‘குடி’மகன்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், பிற மாநிலங்களைப் போலவே சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனை களை கட்டியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டம், ஹார்டி பஜார் தெருவில் இயங்கி வந்த அரசு மதுபானக் கடை ஒன்றில், இளைஞர் ஒருவர் மதுபானத்தை வாங்கிய நிலையில் அந்த பாட்டிலுக்குள் இறந்த தவளையின் உடல் சொர்க்கத்தை நோக்கி மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

டாஸ்மாக்

சொர்க்கம் மதுவிலே என்று தவளையும் நினைத்திருக்கும் போல... உடனடியாக இது குறித்து கடை ஊழியர்களிடம் அந்த இளைஞர் முறையிட்டதை தொடர்ந்து வேறு பாட்டில் கொடுக்கப்பட்டது. இது குறித்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலான கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில மதுபான கடையின் மேலாளர் கூறும்போது, ‘‘மதுபானங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்பதால் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார். 

பீர் டாஸ்மாக்

இனி.. சொர்க்கம்  மதுவிலே என்று ச்...சீயர்ஸ் சொல்லும் முன்பாக பாட்டிலுக்கு தவளையோ, எலியோ மிதக்கிறதா என்பதைப் பார்த்து, உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.  குறைந்த பட்சமாக செத்து மிதக்கிற அந்த சைட்டிஷ்ஷை எடுத்து போட்டு விட்டாவது குடித்து.. குடலை வேக வையுங்க..

உங்கள் செலவில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே வருமானம் பார்த்து கொண்டிருக்கிறது. அத்தனைக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுமே உங்கள் கொள்கையின் உறுதியால் தான், தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web