குடும்பத்தோடு புத்த மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்!

 
சாய் தீனா

தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிரபல நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு மாறினார். இது குறித்த புகைப்படம் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படங்களில் வில்லனாக நடித்து வந்தாலும், நிஜத்தில் நடிகர் சாய் தீனா மென்மையானவர். அவர் புத்த மதத்தைத் தழுவியது மிக சரியானது. யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்க விரும்பாதவர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  

பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து வருபவர் சாய் தீனா. நடிகர் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தீனா, அதன் பின்னர் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

சாய் தீனா

எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடிகர் சாய் தீனாவின் நடிப்பு ரசிகர்களால் தனியே அடையாளம் காணப்பட்டதாக இருந்தது. 

திரையில் நடிப்பையும் தாண்டி சாய் தீனாவின் பேச்சுக்கு ரசிகர்கள் அதிகம். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் வழக்கமுடைய சாய் தீனா, கொரோனா தொற்று காலங்களில் வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். 

சாய்

திரையில் மட்டும் தான் வில்லனாக நடிக்கிறேன்.. நிஜத்தில் வில்லன் எல்லாம் கிடையாது என்பதைப் போல, தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும்.

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை நடிகர் சாய் தீனா தழுவியுள்ளார். பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார் தீனா. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web