பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து!! 6 பேர் கவலைக்கிடம்!!

 
தீவிபத்து


விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அதிகம். இதில் பல ஆலைகள் அனுமதியின்றி தனியார் வசம் உள்ளன. இந்த ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்து பயங்கரங்களும் நடந்தேறி வருகின்றன.இன்று  பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அந்த சமயத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

இந்த கோர விபத்தில் ஆலையின் 5க்கும் மேற்பட்ட அறைகள் முழுவதுமாக தரைமட்டமாகின.  இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  மேலும்  இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நூற்பாலையில்  தீ  விபத்து

 சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி பகுதியில் கந்தசாமிக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில்  பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில்  பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்து

இவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

From around the web