நீச்சல் குளத்தில் மிதக்கும் செஸ் போர்டு! ஜாலியா ஆட்டம் போட்ட மாணவர்கள்!

 
செஸ் போட்டி

பரந்து விரிந்த நீச்சல் குளம். குளத்தில் அழகான வரிசையில் மிதக்கும் செஸ் போர்டுகள். மாணவர்கள் தண்ணீரில் ஆட்டம் போட்டபடியே மிதக்கும் செஸ் போர்டில் விளையாடினார்கள். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது  செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  மேற்கொள்ளப்படு வருகின்றது.

இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. நீச்சல் பயிற்சி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு தண்ணீரில் நின்றபடி செஸ் விளையாடி அசத்தினர்.  பல்வேறு வகைகளி மாணவர்கள் செஸ் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் திண்டுக்கல் மாணவர்கள் செயல் பலரையும் கவர்ந்துள்ளது.

 

இதே போன்று ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் போட்டி நடைபெற்றது. இவற்றில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் பங்கேற்று செஸ் போர்டு போன்று கோலமிட்டு அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web